வெள்ளி, 25 ஜூன், 2010

ஜித்தா நீர்த்தாரை



உலகின் அதி உயரமான நீர்த்தாரை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் காணப்படுகின்றது. (Fountain என்பதை நீர்த்தாரை என்று மொழி மாற்றம் செய்தது சரி என நினைக்கின்றேன்) 1980ம் ஆண்டு மன்னர் பஹத் பின் அப்துல் அசீஸ் அவர்களினால் கட்டப்பட்ட இந்த நீர்த்தாரை அதே ஆண்டின் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மிக அற்புதமான நேர்த்தி மிக்கதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நீர் வீழ்ச்சி பலரின் அபிமானம் பெற்றது. செங்கடலின் வாவி சவூதி அரேபியாவின் மேற்குப் பக்கமாக இந்நீர் வீழ்ச்சி கடலின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகரின் ஈபில் கோபுரத்தை விட அதிக உயரமானது.

இந்த நீர்த்தாரையின் உயரம் 312 மீட்டர் அதாவது 1024 அடியாகும். வேகமாக வீசப்படும் நீரானது மணிக்கு 375 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது. நீரின் பாரம் 18 தொன்களாகும். பனித்துளிகளின் விசிறளைத் தூரவீசும் இதன் அழகை ரசிப்பதற்காக 500 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 5 அங்குல குழாயில் இருந்து எழும் இந்த அற்புத நீர்த்தாரையை பார்க்கக் கிடைப்பது பெரும் பாக்கியங்களில் ஒன்றாகும். வாரத்துக்கு 5 முறை வேலைக்கு செல்லும் பொது எனக்கு பார்க்கும் பாக்கியம் உண்டு.


1 கருத்து:

  1. Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    பதிலளிநீக்கு