ஞாயிறு, 30 மே, 2010
நௌசாத் சிறுகதை
என்ன அதிசயம். எனது வலைப்பக்கத்தை மெல்ல நிர்மாணித்துக் கொண்டிருந்த பொழுது எனது மூத்த சகோதரன் எம். எம். நௌசாத் அவர்களின் சிறுகதை ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. எப்பொழுதுமே மிகச் சிறந்த கதைகளை மட்டுமே எழுதும் அவரின் இந்தச் சிறுகதையும் மிக அற்புதம். விரும்பினால் நீங்களும் வாசித்துச் சுவைக்கலாம். என் உறவு வலைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
விருத்தாப்பியனின் சவப்பெட்டி
எம்.எம்.நௌஷாத்
விருத்தாப்பியனின் சவப்பெட்டி
எம்.எம்.நௌஷாத்
அர்த்தம் பொதிந்த வகையில் தத்துவஞானிகள் உதிர்க்கும் தத்துவங்கள் மீது எனக்கு சின்ன வயதிலிருந்தே அதீத பிரேமை இருந்தது. எனவே பல்கலைக் கழகத்திலே மனித இயலில் பட்டப் படிப்பை முடித்த கையோடு தத்துவவியலில் பட்டப் பின் படிப்பையும் முடித்துக் கொண்டு பிரான்ஸில் உள்ள பிரபலமான பல்கலைக் கழகமொன்றில் விரிவுரையாளராக இணைந்து கொண்டேன் பிரஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்த காரணத்தால். அப்போது எனக்கு வயது இருபத்தெட்டு.
இரவிலே கண்விழித்து பகலிலே பசியோடிருந்து தத்துவங்களை நெட்டுருப் பண்ணி ஒப்பு வித்துத்தான் மாணவர்கள் பட்டங்களையும், விஷேட பட்டங்களையும் பெற்று வந்தனர். இந்த வகையான கிளிப்பிள்ளைக் கல்வி எனக்குக் கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை. என்னுடைய வாழ்க்கைக்காலத்தில் பெரும்பகுதி பயணங்களில் தான் கழிந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. பிரமாண்ட அளவில்; எழுதப்பட்டிருந்த தத்துவங்களில் சொற்பஅளவாவது யதார்த்தம் இருக்கிறதா? அந்தத் தத்துவங்களின் அட்சரம் பிசகாது இந்த உலகத்தின் எந்த மூலையிலாவது யாராவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்று அறிந்து கொள்ளத்தான் இந்தச்சஞ்சாரம் எல்லாம். இத்தனை வருடங்களாக அப்படியான ஒரு மனிதனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்;;;: கிடைக்க வில்லை.
நான் ஒருமுறை இமயமலையின் அடிவாரத்திற்குச் சென்றிருந்தேன். ஞானிகளையும், ரிஷிகளையும், தத்துவஞானிகளையும் ஒருங்கே தரிசிக்க வேண்டுமென்றால் இமயமலையின் அடிவாரம்தான் இடம். இந்தியத் தத்துவநூல்களில் ரிஷிகள் பற்றி நிறைய வர்ணனைகள் செய்திருந்தார்கள். அவர்கள் காலவோட்டத்திலே தவவலிமை காரணமாக மகரிஷிகளாக உருவெடுப்பார்கள் என்றும் எழுதியிருந்தார்கள். அந்த வர்ணனைகள் அச்சொட்டாகப் பொருந்நக் கூடிய, இடுப்பு வரை தொங்கும் நீண்ட நரைத்த தாடி வளர்த்த, கண்களில் ஞானத்தீட்சண்யம் புதைந்த ஒரு ரிஷியை அங்கு சந்தித்தேன். வாரப்படாத சிக்குடன் காணப்பட்ட பரட்டைத் தலையைப் பார்த்தவுடன் குமட்டல் வந்த போதிலும் பொறுத்துக் கொண்டேன்.
“இந்த இமயமலைச் சாரலிலே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன் நான்.
“தவம் செய்து கொண்டிருக்கிறேன்”
“தவம் என்றால் என்ன?” என்று மீண்டும் கேட்டேன் நான்.
“கண்களை மூடி ஆடாமல் அசையமால் மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை நோக்கியவாறு கடவுளின் சிந்தனையுடனேயே இருக்க வேண்டும்”
“அப்படித் தவம் செய்தால் என்ன பிரதிபலன் எங்களுக்குக் கிடைக்கும்?”
“கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும்”
“அப்படிக் கடவுளின் அனுக்கிரகம் நமக்குக் கிடைத்தால் அதற்குப் பிறகு?”
“நாம் எவற்றையெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் விரும்புகிறோமோ அவையெல்லாம் நமக்குக்கிட்டும். அழகான வீட்டின் மீது ஆசையிருந்தால் அது, ஆடம்பர வாகனம் மீது ஆசையிருந்தால் அது, அழகான மனைவி மீது ஆசையிருந்தல் அது…” என்று அடுக்கிக் கொண்டே போனார் ரிஷி.
“நீங்கள் திருமணம் முடித்தவரா?” என்று கேட்டேன் நான்.
“ஐயோ! சம்சார வாழ்க்கை நம் தவத்தை நாசமாக்கி விடும்” என்று காதுகளை மூடிக் கொண்டார் ரிஷி.
“நீங்கள் இந்த இமயமலைச்சாரலிலே எத்தனை வருடங்களாகத்தவம் செய்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டேன் நான். “இருபது வருடங்களாக”
“இருபது வருடங்கள் தவஞ் செய்த உங்களுக்கு கடவுளின் அனுக்கிரகம் கிட்டி விட்டதா?”
“இல்லை”
“இருபது வருடங்களாக உங்களுக்குக் கிடைக்காத கடவுளின் அனுக்கிரகம் இனிமேலும் கிடைக்குமென்று நம்புகிறிர்களா?”
“அதிலென்ன சந்தேகம்? நாம் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்றார் ரிஷி. “ரிஷி அவர்களே நான் சொல்கிறேன் என்று கோபிக்க வேண்டாம் கடவுளை நீங்கள் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்” என்றேன் நான்.
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“நீங்கள் இந்த இருபது வருடங்களும் உங்கள் கைகளால் உழைத்து வந்திருப்பீர்களென்றால் நீங்கள் என்னென்ன ஆசைப்பட்டீர்களோ எல்லாமே கிடைத்திருக்கும். அழகான மனைவி, ஆடம்பர வாகனம், மாளிகை எல்லாமே. நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்கள்” என்றேன் நான்.
நான் சொன்ன இந்தத்தத்துவங்கள் ரிஷியை நிலை குலையச்செய்து விட்டது. மனசையும் அப்படியே சுட்டிருக்க வேண்டும். அன்றிலிருந்து என்னுடன் பேசுவதையே அடியோடு நிறுத்திக் கொண்டார் ரிஷி.
அதற்குப் பிறகு சுவர்க்கத்தீவை நோக்கி என்னுடைய சஞ்சாரத்தைத் தொடர்ந்தேன். சுவர்க்கத்து தீவு எனக்கு நன்றாகப் பிடித்துப் போய்விட்டது. நல்ல மனிதர்கள், எப்போதும் முகத்தில் புன்னகை தவழப் பழகுவார்கள். இவ்வாறு சுவர்க்கத்துத்தீவில் பல நாட்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்த போதுதான் ஒர் அபூர்வமான சவப்பெட்டியைச் சந்தித்தேன்.
சவப்பெட்டி அபூர்வமானது@ நிறமும் அபூர்வமானது. கபிலமாகவும் இல்லாமல் பொன்னிற மாகவும் இல்லாமல் மஞ்சளாகவும் இல்லாமல் அது ஒலிவ் பச்சையில் இருந்தது. தடவிப் பார்த்தேன். மேற்பரப்பு கரடுமுரடாக இருந்தது. உள்ளே கைகளை விட்டுத் துழாவினேன் உட்பரப்பும் கரடுமுரடாக இருந்தது.
அந்த அபூர்வமான சவப்பெட்டிக்குச் சொந்தக்காரனும் ஒர் அபூர்வமான மனிதன். அவனுடைய பெயர் ஜவான் வயது ஓர் அறுபது இருக்கும் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்தான். அருகில் அழகான நீர்வீழ்ச்சியும், பசுமை கொழிக்கும் வனாந்தரமும், நீர் வீழ்ச்சியிலே நீர் விழுந்து தெறிக்கும் ஒலி எந்த வேளையிலும் கேட்டுக் கொண்டும் இருந்தது.
இந்தமனிதனைப் பற்றிக் கிராமத்தில் எல்லோரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவனுக்கு அழகான பட்டப் பெயரும் இருந்தது. “சவப்பெட்டி மனிதன்”. என்று. நானும் சவப்பெட்டி மனிதனைச் சந்திக்கும் ஆசையில் அவனுடைய வீட்டிற்குப் போனேன்.
அதனை வீடு என்று அழைக்க முடியாது. கூரை இலைகுழைகளால் வேயப் பட்டிருந்தது. சுவர் மண்ணைக் குழைத்து வரித்துக் கட்டப்பட்டிருந்தது. அதிசயம் என்ன வென்றால் சவப்பெட்டி மனிதனின் வீட்டிற்கு கதவுகள் எதுவும் இருக்கவில்லை.
நான் வீட்டிற்குள் நுழைந்தபோது ஜவான் பெட்டியொன்றிற்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் அவனைத் தட்டி எழுப்பி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
“என்ன மனிதரே இந்த வீட்டில் எவ்வளவோ இடம் இருக்க எதற்காக இந்தப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன் நான்.
என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் சவப்பெட்டி மனிதன்.
“நீ இதனைப் பெட்டி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இது பெட்டி இல்லை நானோ நீயோ செத்துப் போனவுடன் உடலைப்போட்டு ஆணி அறைந்து மூடுவோமே பெட்டி! சவப்பெட்டி” என்றான் ஜவான் பெட்டியின் மூடியை மூடிக் கொண்டே.
இப்போது நன்றாகப்பார்த்தேன் ஜவான் சொன்னது போல் அது சவப்பெட்டிதான்.“இந்த ஊரே உன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொள்ளும் சவப்பெட்டி இதுதானா?” என்று கேட்டேன் நான். ஜவான் புன்னகைத்துக் கொண்டே ~ஆம்| என்றான். ஏற்கனவே நான் வர்ணித்ததெல்லாம் இந்தச் சவப்பெட்டியைப் பற்றித்தான்.
ஜவானைப் பார்த்தால் உளநோயால் பீடிக்கப்பட்டவனாகவும் தெரியவில்லை,; பைத்தியக் காரனாகவும் தெரியவில்லை;: அல்லது வாழ்க்கையை வெறுத்து விரக்தியினால் அப்படிச் செய்பவனாகவும் தெரியவில்லை.
அவன் சுடச்சுடக் காப்பி ஊற்றிக் கொண்டு வந்தான். காப்பியின் நறுமணம் அறை முமுவதும் கமழ்ந்நது, அவனே தயாரித்த காப்பி. நீர்விழ்ச்சியின் குளிருக்கு இதமாக இருந்தது, சுவையும் பிரமாதம். அவனிடம் இந்த விருந்தோம்பலைத்தவிர நிறைய நற்குணங்களை அவதானித்தேன்.
“ஜவான் உன்னைப் பார்த்தால் பரம ஏழையாகவும் தெரியவில்லை. எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய்? இந்தக் குறுகிய சவப்பெடடிக்குள் படுத்துத் தூங்குகிறாய்?” என்று ஆற்றாமையால் கேட்டேன் நான்.
“வாழ்க்கையின் எந்தக் கணத்திலும் மரண ஞாபகத்தில் வாழ்வதற்கு இதைவிடச்சிறந்த வழியைநான் காண வில்லை” என்றான் ஜவான்.
ஜவான் என்னை அவனுடைய சமையலறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மூன்று கற்கள், ஒரு பானை, ஒர் அகப்பை , ஒரு தீப்பெட்டி, ஒரு பீங்கான் என்பவற்றைத்தவிர சமைப்பதற்கான எந்தத்தடையங்களும் காணப்படவில்லை.
“என்னப்பா ஜவான் இது சமையலறை? நீங்கள் எப்படிச் சாப்பிடுகிரீர்கள்?” என்று கேட்டேன் நான்.
ஜவான் சொன்னான், “கோதுமை மா இருக்கிறது, நீரிலே அவித்துச் சாப்பிடுவேன்@ அரிசிஇருக்கிறது, வறுத்துச் சாப்பிடுவேன்@ குரக்கன் மா இருக்கிறது, குழைத்துச்சாப்பிடுவேன்”
“இதுவா வாழ்க்கை?” நான் கேட்டேன்.
“உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது. எனக்கும் அதிலே உடன்பாடுண்டு. என்றாலும் வாழ்க்கையை வாழ்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நாம் எலிப்பந்தயம் அல்லவா நடத்திக் கொண்டிருக்கிறோம்”
“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்’?
“வாழ்கிறோம் என்றஆசை அதீதமாகி நாம் வந்து நிற்கிற இடம் எங்கே? மற்றைய மனிதனின் கழுத்தை மிதித்துத்தான் ஒவ்வொரு நாணயக்குற்றியையும் நாம் சம்பாதிக்கிறோம்.அப்படியான வழிமுறைக்கு என் மனம் ஒப்பவில்லை, அது மட்டுமல்ல சொத்துக்கள் சேரச்சேர அதனைக் கட்டிக் காக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டி வரும், கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டோம்”எனப் பதிலளித்தான் ஜவான்.
ஜவானை எனக்கு நன்றாகப் பிடித்துப் போய் விட்டது. நான் அவனுடைய வீட்டிற்கு அடிக்கடி போய் வந்தேன். வீட்டு வேலைகளுக்கு ஒரு வேலைக் காரியையாவது வைத்துக் கொள்ளும்படி நான் அவனை வேண்டிக் கொண்டேன். அவன் அதனை மறுத்து விட்டான். அவனுடைய மனது ஏதோ ஒருகாரணத்தால் கடுமையாக காயப்பட்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
அவனுடைய இதயத்தைச் சுற்றிக் கட்டப் பட்டிருக்கும் கருங்கல் கோட்டையை உடைக்க நான் பலதடவை முயற்சி செய்தேன். குறைந்ந பட்சம் ஒரு கல்லையாவது பெயர்க்க முயற்சி செய்தேன் முடியவில்லை. இவன் இந்த உலகத்தில் வாழ்வதற்கு எவ்விதத்திலும் லாயக் கற்றவன் என்றாலும் அவன் மீது எனக்கு அபரிமிதமான அபிமானம் இருந்தது.
ஒருநாள் எதிர்பாராத் தருணமொன்றிலே ஜவான் என்னை மிகவும் தொலைவிலுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். அந்தப் பூங்கா உண்மையிலேயே வண்ணமயமான வண்;ணத்துப் பூச்சி வகையறாக்களால் நிரம்பி வழிந்த ஒர் அற்புத உலகம்.
சிறுவர்கள் வண்ண வண்ண ஆடைகளுடன் அங்கே வண்ணத்துப் பூச்சிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லா வகையான வண்ணத்துப் பூச்சிகளும் அங்கே வாழ்ந்தன, பறந்தன, வண்ணத்துப் பூச்சி ரசிகர்கள் அங்கே நிறைந்திருந்தார்கள். யாரும் வண்ணத்துப்;;; பூச்சிகளைத் தொடக்கூடாது. பார்க்கலாம்@ ரசிக்கலாம்@ சலனப் படங்களாக எடுக்கலாம்@ தொடக்கூடாது. அது அந்தப் பூங்காவில் நிலவிய எமுதப்படாத சட்டம்.
“வண்ணத்துப் பூச்சிகளுடன் பேசவும் முடியும்” என்றான் திடீரென்று ஜவான். நான் கிண்டல் கலந்த தொனியில் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“பைத்தியம் பிடித்தால் ஒரு மனிதன் பாம்புகளுடனும் பேசலாம்”
“அப்படியா சொல்கிறாய்?” “அப்படித்தான் சொல்கிறேன்”
சிவப்பு கபிலம் ஆகிய வர்ணச் சேர்க்கைகளால் குழைத்துச் செய்யப்பட்ட இறகுகளுடன் ஒரு வண்ணத்துப் பூச்சி ஜவானின் உள்ளங்கையில் பறந்து வந்து அமர்ந்தது.
“அழகிய வண்ணத்துப் பூச்சியே எந்த உலகத்திலிருந்து நீ வருகிறாய்?” என்று அதனைப்பார்த்துக் கேட்டான் ஜவான்.
வண்ணத்துப் ப+ச்சி பேசவில்லை. ஜவான் வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை ஒட்டிப் பிடித்து காதருகே கொண்டு போய்” அங்கே என் மனைவியைக் கண்டாயா?” என்று கேட்டான். ஜவான் என்ன என்னுடன் விளையாடுகிறானா? அல்லது உண்மையாகவே பைத்தியம் பிடித்து விட்டதா?
“யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன் நான்.
“கலைத்துவமிக்க ஆடைகள் அணிந்து வந்து இங்கு நிற்கும் இந்த வண்ணத்துப் பூச்சியுடன்”
“வண்ணத்துப் பூச்சிகள் ஒருபோதும் பேசமாட்டாது” என்றேன் நான் எரிச்சலுடன்.
“வண்ணத்தப் பூச்சிகளின் மொழி நமக்குத்தெரிந்தால் பேசலாம்” என்றான் ஜவான்.
“வண்ணத்துப் பூச்சிகளிற்கும் மொழி இருக்கிறதா?”
“ஏன் இருக்கக்கூடாது? எறும்புகளிற்கும் மொழி உண்டு@ ஒட்டச்சிவிங்கிகளிற்கும் மொழி உண்டு இயற்கை என்ற அற்புதமான மொழி. அந்த மொழியைக் கற்றுக் கொண்டால் புல்புல் பறவையுடனும் பேசலாம், சூரியகாந்தி மலருடனும் பேசலாம்” என்றான் ஜவான்.
“தத்துவவியல் பட்டதாரியுடன் தத்துவம் பேசுகிறாயே” என்று சிரித்தேன் நான்.
“நான் செல்லுவது ஏட்டுச்சுரைக்காய் தத்துவமல்ல, உண்மை” என்றான் ஜவான்
“அதுசரி, அந்த விஷயம் ஒருபுறம் இருக்கட்டும். உனக்கு மனைவி இருக்கிறாள் என்ற விஷயத்தை நீ ஒருபோதும் என்னிடம் சொல்லவே இல்லையே”
ஜவான் சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்து விட்டு” அவள் எப்போதோ இறந்து போய் விட்டாள்” என்றான் சோகத்துடன்.
“வாழ்க்கை மீது உனக்கு ஆசை இல்லை பற்று இல்லை என்று தத்துவம் உதிர்த்தாயே எங்கே அந்தத் தத்துவங்கள்?” என்று கேலியுடன் கேட்டேன் நான்.
“வாழ்க்கை மீது ஆசையில்லை என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது அதீத ஆசை கூடாது. மரணத்தை எந்தக் கணமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். மரணம் வருகிறதே என்று கவலைப் படக்கூடாது. இதுதான் நான்” என்றான் ஜவான்.
“பிள்ளைகள் யாருமில்லையா?”
“இல்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தான் இரத்தப்பெருக்கு ஏற்பட்டு அவள் இறந்து போனாள்”
ஜவான் சொன்னதை கேட்டு நான் துயருற்றேன்.
சடுதியாக ஜவானின் முகம் சோகத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சித்துள்ளலாக மாறியது. பொன்னிற இறகுகளில் மஞ்சள், கறுப்புப் புள்ளிகள் கலந்து போட்ட ஒரு வண்ணத்துப் பூச்சி ஜவானுக்கு அருகிலிருந்த சிறு கற்பாறையில் வந்து அமர்ந்தது. வெயில் பட்டு அதனுடைய இறகுகள் தகதகவென்று மின்னின.
“இதோ என் மனைவி வந்துவிட்டாள்” என்று மகிழ்ச்சிப் பெருக்கால் கூவினான் ஜவான். என்ன இவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் தான் பிடித்துவிட்டதா? “இந்த வண்ணத்துப் பூச்சி உன் மனைவியா?” இது ஒரு சாதாரண வண்ணத்துப் பூச்சி அழகாக இருக்கிறது. அவ்வளவு தான் அது உன் மனைவியல்ல.
ஜவானுக்குக் கோபம் வந்து விட்டது.
“இந்த வண்ணத்துப் பூச்சி என் மனைவி இல்;லை என்றா சொல்லுகிறாய்? என்று கோபத்துடன் கேட்டவாறே விறுவிறு என்று நடக்க ஆரம்பித்தான் ஜவான். நான் “நில் நில்” என்று சொல்லிக் கொண்டே ஜவானுக்குப் பின்னால் ஓடினேன். வீடு வந்து சேர்ந்தபோது எனக்கு கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கியது.
ஜவான் என்னைப்பார்த்து கலகல வென்று சிரிக்க ஆரம்பித்தான.; “என்ன பயந்துவிட்டாயா?” என்று கேட்டான். நானும் சிரித்தேன். ஜவான் என் பக்கம் திரும்பி தன்னுடைய உள்ளங்கையைக் காட்டினான். அந்தப் பொன்னிற வண்ணத்துப் பூச்சி அவனைச்சுற்றிச் சுற்றிப் பறக்க ஆரம்பித்தது.
ஜவான் உள்ளே போய்ஒரு நேர்த்தியான தங்க நிற ஆடை யொன்றுடன் வெளியே வந்தான்.
“இதோ என் மனைவி இறந்த போது இந்த ஆடையைத்தான் அணிந்திருந்தாள். இப்போது அவள் வண்ணத்துப் பூச்சியாகத் திரும்பி வந்துள்ளாள்” என்று சொன்ன ஜவான் வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் இரண்டையூம் விரல்களால் பிடித்து ஆடையின் மீது வைத்தான். என்ன ஆச்சரியம். வண்ணத்துப் பூச்சியின் இறகுகளுடன் அந்த ஆடையின் அலங்காரம் அச்சொட்டாக அப்படியே பொருந்தி இருந்தது.
உண்மையாகவே இந்த வண்ணத்துப் பூச்சியை அவனுடைய மனைவி என்று நம்புகிறானா? அல்லது எனக்கு பூச்சாண்டி காட்டுகிறானா என்று எனக்குப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவன் மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடுகிறான். என்னையும் அந்த ஆழிக்குள் மூழ்கடிக்க முயற்சி செய்கிறான்.
“உன் மனைவி இறந்து எத்தனை வருடங்களாகின்றன?”
“முப்பது வருடங்கள்”
“ஒரு வண்ணத்துப் பூச்சியால் முப்பது வருடங்கள் ஜீவிக்க முடியுமா?’
“சாகாவரம் பெற்ற வண்ணத்துப் பூச்சியைப் பற்றி கேள்விப்பட இல்லையா? என் மனைவி இதயத்;திற்குள் சாகாவரம் பெற்று வாழ்கிறாள். இந்த வண்ணத்துப் பூச்சியும் அப்படித்தான் சாகாவரம் பெற்று வாழ்கிறது” என்றான் ஜவான்.
இவன் என்ன? எல்லாப் புறங்களில் இருந்தும் என்னைத் தாக்குகிறானே.
“நீ எப்போது இறப்பாய்.” என்று நானும் இடக்கு முடக்காகக் கேட்டேன்.
“கடவுள்தான் அறிவாh.; அந்த நல்ல நிகழ்ச்சிக்காகத்தான் நானும் ஆவலொடு காத்திருக்கிறேன்”
“ஏன் தற்கொலை செய்து கொள்ள வில்லை?”
“அது கோழைகளின் செயல்”
“நீ மரணிக்கும் போது எங்கே இருக்க வேண்டு மென்று ஆசைப் படுகிறாய்?”
“சந்தேகமே இல்லாமல் சவப் பெடடிக்குள்தான்”
“சவப்பெட்டிக்குள்ளேயே நீ மரணித்து விட்டாய் என்றே வைத்துக் கொள்ளுவோம்.அந்த மரணத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளுவது எப்படி?” நான் கேட்டேன் ஜவான் கொஞ்சநேரம் யோசித்தான்.
“அதற்காகத்தான் என் வீட்டை கதவுகளே இல்லாமல் நிர்மாணித்திருக்கிறேன். வழிப் போக்கர்கள் என்வீட்டிற்குள் நுழைந்து நான் சவப்பெட்டிக்குள் மரணித்துப் போயிருப்பதைக் காண்பார்கள்”
“அதுசரி வீட்டிற்குள் நுழைய முன்பாக நீ சவப்பெட்டிக்குள் மரணித்து இருப்பதை வழிப்போக்கர்கள எப்படி அறிந்து கொள்வார்கள்”
“என் நடமாட்டம் சந்தடி இல்லாததைக் கெண்டு அறிந்து கொள்வார்கள்?;”
“உன் நடமாட்டம் இல்லா விட்டால் நீ ஊரில் இல்லை என்றுதான் வழிப் போக்கன் நினைத்துக் கொள்வானே ஒழிய நீ மரணித்து விட்டாய் என்று நினைக்க மாட்டான். நீ இறந்து விட்டாய் என்பதை வழிப்போக்கன் எப்படி அறிந்து கொள்வானென்று நான் சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள்”
“நீ சவப்பெட்டிக்குள் அப்படியே மரணித்து விடுவாய். இரண்டு மூன்று நாட்கள் கழித்து உன் உயிரற்ற உடம்பு புழுத்து பிணவாடை வீச ஆரம்பிக்கும். வழிப் போக்கன் வந்து பார்ப்பான@;; காவல்துறைக்கு அறிவிப்பான். அவர்கள் வந்து அனாதைப் பிணம் என்று சொல்லி எங்கோ ஒரு மூலையிலே அடக்கம் செய்து விடுவார்கள்”
“ஓ இப்படியும் ஒன்று இருக்கிறதா?” என்று யோசிக்க ஆரம்பித்தான் ஜவான்.
“ஜவான் நான் சொல்வதை கவனமாகக் கேள். இருபத்து நான்கு மணி நேரமும் நீ மரணத்தை எதிர்பார்த்து வாழ்கிறாய் அது உண்மை. அதில் எந்தத்தவறும் இல்லை, ஆனால் மரணித்த பின் புழுத்த அனாதைப் பிணமாக அடக்கப் படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள், குறைந்த பட்சம் உன் மரணத்தை உலகம் தெரிந்து கொள்வதற்காகவாவது ஒரு பெண்ணை மணந்து கொள்” என்று சொன்னேன் நான்.
“அதற்குப் பிறகு இன்னுமின்னும் பணம் சம்பாதிக்க வேண்டு மென்ற பேராசை உண்டாகி விடும்” என்றான் ஜவான்.
“ஜவான் அதற்கும் ஒரு வழி சொல்லுகிறேன். ஒரு பரம ஏழையான பெண்ணைத் திருமணம் செய்து கொள். திருமணம் முடித்த கையோடு உனக்கிருக்கும் எல்லாச் சொத்துக்களையும் அவள் பெயருக்கே எமுதி வைத்து விடு. உன்னுடைய சவப்பெட்டியை மட்டும் உன்னோடு வைத்துக் கொள். அதற்குப் பிறகு ராஜா மாதிரி சவப்பெட்டிக்குள் படுத்துறங்கு. மரணம் பற்றிய கவலையே இல்லாமல்” என்றேன் நான்.
ஜவான் கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். “நீங்கள் சொல்லும் யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த யோசனையையும் பரிசீலித்துப் பார்க்கிறேன்” என்று பதிலளித்தான் ஜவான்.
இதற்கிடையில் சுவர்க்கத்துத் தீவில் என்னுடைய விடுமுறைக்காலம் முடிந்து விட்டது. பல்கலைக் கழகத்திலும் முடிக்க வேண்டிய வேறு காரியங்கள் நிறைய இருந்ததால் நான் உடனடியாகவே பிரான்ஸை நோக்கிப் பயணமானேன்.இரண்டு மூன்று மாதங்கள் கழிந்து ஒருநாள் ஜவான் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அறிவுறுத்தியபடி நான் ஒரு பரம ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் தான் சொன்னபடியே எல்லாச் சொத்துக்களையும் அவள் பெயருக்கே எமுதி வைத்து விட்டதாகவும் எனக்கு அறிவித்தான் “ சவப்பெட்டியின் நிலைமை என்ன? “ என்று நான் கேட்டேன். “ நிலைமை மாறவில்லை “ என்று அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
இந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு எந்தத் தொடர்புகளும் எங்களுக்கிடையில் இருக்கவில்லை. சுவர்க்கத்துத் தீவுக்கு வரக்கூடிய சாத்தியங்களும் எனக்கு இருக்கவில்லை, வேலைச் சோலியும் அதிகரித்ததால் ஜவானை நான் அடியோடு மறந்து விட்டேன்.
இவ்வளவு நேரமும் நான் சொல்லியது சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு சுவர்க்கத்துத் தீவிற்கு வேறுகாரியம் நிமித்தம் வந்திறங்கிய பொழுது என்னுடைய ஞாபகத்திற்கு முதல் வந்த மனிதன் ஜவான். அந்த அற்புதமான மனிதனின் ஞாபகங்கள் என்னுடைய அடிமனதிலே இன்னும் நீக்கமற நிறைந்திருந்தன. முதலில் கிறுக்கனாகத்தான் அவன் தோற்றமளித்தான். யோசித்துப் பார்த்த பொழுது தத்துவ ஞானிகளையும் விஞ்சிய இலட்சணங்கள் அவனிடம் இருந்தன. முக்கியமாக கிறுக்குத்தனம். தத்துவ ஞானிகள் எல்லோரும் கிறுக்கர்களாகத்தான் இருந்நார்கள்.
அவனிடம் ஓர் ஆசை இருந்தது. என்னிடம் அதனை அவன் சொன்னான். தான் மரண மடைந்து சவப்பெட்டிக்குள் அவனை வைத்த உடன் சவப்பெட்டியின் மூடியை நான் மூட வேண்டு மென்பதே அவன் ஆசை. அந்த ஆசை நிறைவேற வில்லை. இப்போது மண்ணோடு மண்ணாக உக்கிப் போயிருப்பான் அவன்.
ஜவானுடைய மனைவியையாவது தரிசித்து விட வேண்டும் என்ற ஆவலில் ஜவான் வாழ்ந்த இடத்திற்கு நான் போனேன். ஜவான் இருந்த இடத்தில் இப்பொது ஓர் அழகிய பங்களா இருந்தது. சுற்றிவரப் பூந்தோட்டம் இருந்தது. கார், காவற்காரர்கள் எல்லோரும் இருந்தார்கள். நான் பிரமித்துப் போய் விட்டேன்.
அடர்த்தியாக மீசை வளர்த்த ஒரு கம்பீரமான அழகிய இளைஞன் என்னை வரவேற்றான். நான் என்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்த உடனேயே அந்த இளைஞன் முந்திக் கொண்டு “ “எனக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும் தந்தை அடிக்கடி உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்” என்று சொன்னான். என் மனம் நெகிழ்ந்து போய் விட்டது. பெருமையாகவும் இருந்தது. இந்தளவுக்கு என்னை நேசித்த ஒரு மனிதனை நான் வாழ்க்கையில் சந்தித்ததேயில்லை.
சற்று நேரத்தில் ஒரு பெண்மணி வந்தாள். முக இலட்சணங்களை வைத்து ஜவானின் மனைவி அவள் என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு நேரம் போகவில்லை. அவள் என் முகக் குறிப்பை உணர்ந்தவளாக “ நான் தான் ஜவானின் மனைவி “ என்று சொன்னாள்.
ஜவானின் சவப்பெட்டிக்கு என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள என்மனம் ஆவலாய்த்துடித்தது. இந்த விடயத்தை எப்படி இவர்களிடம் கேட்பது? என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா? என்றாலும் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் என்னால் பிரான்ஸ் திரும்ப முடியாது.
நான் கொஞ்சம் தயக்கத்துடன் “ நீங்கள் கோபித்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ன ஆவலாய் இருக்கிறேன் நான் “ என்றேன்.
“பரவாயில்லை கேளுங்கள்” என்றான் மகன். “ உங்கள் தந்தை ஒரு சவப்பெட்டி வைத்திருந்தார். அந்தச் சவப்பெட்டிக்குள்தான் எப்போதும் படுத்துறங்கினார். மரணத்தை எக்கணமும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்தச் சவப்பெட்டிககு என்ன நடந்தது?” என்று ஆவலோடு கேட்டேன் நான்;. மகன் சிரித்தான்.
“வாருங்கள் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கிறது அந்த சவப்பெட்டி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் இல்லை, அது களஞ்சியசாலையின் மூலையில் போடப்பட்டு எத்தனையோ வருடங்களாகி விட்டன” என்று சொல்லிக் கொண்டே என்னை வெளிவீட்டிற்கு அழைத்துச் சென்றான் மகன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஜவான் இன்னமும் உயிரோடு இருக்கிறான். ஆடம்பரமான கட்டில், அழகிய பஞ்சணை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திண்டு, அலங்கார விளக்குகள், பணிவிடை செய்ய வேலைக்காரர்கள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
நான் எமுப்பினேன், என்னை உடனடியாகவே அடையாளம் கண்டு விட்டான் ஜவான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவனால் அதிகமாகப் பேச முடியவில்லை. வயதுத் தளர்ச்சியா? வாழ்க்கைத் தளர்ச்சியா?
என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டே சிரமப்பட்டுப் பேசினான் ஜவான்.
“உங்களைத்தான் இவ்வளவு காலம் எதிர்பார்த்துக் காத்திருந்தேன் நௌஷாத், நீங்கள் வருவீர்களென்று எனக்கு நன்றாகத் தெரியும். என் உயிரை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினான் ஜவான்.
“ஏன் ஜவான் என்ன நடந்தது” என்று கேட்டேன் நான் பதைபதப்புடன். “டாக்டர்கள் எனக்கு நாள் குறித்து விட்டார்கள். நுரையீரற் புற்று. என்னுடைய மகனின் திருமணத்தை நான் பார்க்க வேண்டும், என்னுடைய பேரப்பிள்ளைகளை நான் பார்க்க வேண்டும். என்னை பிரான்ஸ் நாட்டுக்குக் கொண்டு போயாவது காப்பாற்றுங்கள். பணத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத்தாயாராக இருக்கிறேன்” என்று கெஞ்சினான் ஜவான்.
நான் என்னால் முடிந்தளவு அவனை ஆறுதல்படுத்தினேன். அவனுடைய சவப்பெட்டியைப் பற்றிப் பேச எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் என் மடியில் படுத்தவாறே உயிரை விட்டான் ஜவான்.
கடவுள் என்ன காரியத்திற்காக இங்கு என்னை வர வைத்தாரோ தெரியவில்லை. ஆனால் ஜவான் ஆசைப்பட்டபடி அவனுடைய மரணத்திற்கு நான் வந்து சேர்ந்து விட்டேன்.
நான் ஜவானின் மகனைக் கூப்பிட்டு ஜவானின் ஆசையைச் சொன்னேன்.
“இந்த சவப்பெட்டிக்குள் தான் தன்னை அடக்க வேண்டு மென்று உங்கள் தந்தையின் ஆசை இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்றுவது நம்முடைய கடமை” என்றேன் நான்.
மகன் என்னைக் களஞ்சிய அறைக்குள் அழைத்துச சென்றான். அவன் சொன்னதைப் போலவே அந்தச் சவப்பெட்டி இற்றுப் போய் அனாதையாக ஒரு மூலையில் கிடந்தது.
“ஐயா நீங்கள் சொல்லும் விஷயத்தைப் பற்றி எனக்கு கொஞ்சங்கூடத் தெரியாது. இந்தப் பெரிய வீட்டை என் தந்தை நிர்மாணித்தர். எனக்காகவும் குடும்பத்துக்காகவும் அவர் கடைசி வரை வியர்வை சிந்தி உழைத்தார்@ நிறையச் சொத்துக்களைச் சேர்த்தார்@ அப்படிப்பட்ட மனிதரை இற்றுப்போன இந்தப் பெட்டிக்குள் அடக்க நான் விரும்பவில்லை” என்று சொல்லி ஒரேயடியாக மறுத்து விட்டான் மகன்.
என்னால் இதற்குமேல் ஒன்றுமே பேச முடியாது. அந்த உரிமை எனக்கு இல்லை. இது அவர்களின் சொந்த குடும்ப விவகாரம்.
இறுதிக்கிரியைகள் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் ஆடம்பரமான முறையில் சிறப்பாக நடந்து முடிந்தன. நான் அவர்களின் வீட்டை விட்டுப். புறப்படுவதற்கு முன் மீண்டும் அந்தக்களஞ்சிய அறைக்குச் சென்று சவப்பெட்டிக்கு அருகில் அமர்ந்தேன். மௌனமாக புழுதி படிந்து இற்றுப் போயிருந்த பெட்டியைத் தூசுதட்டி விட்டு மேல் மூடியைத் திறந்தேன். சவப்பெட்டி நிறைய பணத்தாள்கள் கற்றை கற்றையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
(யாவும் கற்பனை)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)